எமது இணையம் தற்போது சீரமைப்பு செய்யப்படுகிறது .சிரமத்துக்கு வருந்துகிறோம். உங்கள் தேடலுக்கு திறந்தே உள்ளது

வெள்ளி, 24 ஜூன், 2011


திங்கள், 20 ஜூன், 2011

புலம்பெயர் தமிழர்தம் நிதிவளமும் - அரசியல் அழுத்தத்திற்கான நகர்வுகளும்..
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 12:17 GMT ] [ புதினப் பணிமனை ]
'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி

இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் 'இனஅழிப்பிற்கு' உள்ளாக்கப் படுகின்றனர் என்பதை உலகத்தமிழர்கள் சுட்டிக்காட்ட முனையும் அதேவேளை தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது 'போர்குற்றம்' என்பதை பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் கூறி வருகின்றன.

'போர்குற்றம்' என்றால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படலாம், ஆகக்கூடினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகையோ அல்லது நட்டதொகையோ வழங்கப்படலாம் இது இன்னும் ஒருவகையில் சிறிலங்கா அரசியல் எல்லைக்குட்பட்ட பகுதியாகவே தமிழர்கள் தொடர்ந்தும் வாழ்வதற்கு ஏற்று கொண்டதாக கருதப்படலாம்.

ஆனால் 'இனஅழிப்பு' என்று நிரூபிக்கப்பட்டால். தமது எதிர்காலத்தை சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்மானிப்பதற்கு பாதிக்கப்பட்ட பகுதியினருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும் என்பதற்கிணங்க பொதுசன வாக்கெடுப்பு மூலம் பிரிந்து செல்வதற்கு வாய்ப்பு உண்டு என உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அரசோ இந்நிலையை அடியோடு மறுக்கும் அதேவேளை சிறிலங்கா ஆட்சி முறைமையை தமிழர் தரப்பினர் ஏற்றுகொள்கின்றனர் என்பதை உலகிற்கு காட்டும் பொருட்டு தமிழர்களுக்கான அரசியல்தீர்வு என்ற பெயரில் வெற்றுப் பேச்சு வார்த்தைகளை காட்டி ஏமாற்றும் போக்கை கடைப்பிடிக்கிறது,

பெரும்பான்மை பேரினவாத மக்களாட்சி கொண்ட சிறிலங்கா அரசு, உலகின் மக்களாட்சி பண்புகள் என்ற பெயரில் ஒரு அரசியல் எல்லைக்குட்பட்ட பிராந்தியத்தில் எல்லா குடிமக்களுக்கும் அப்பிராந்தியத்தின் எப்பகுதியிலும் குடியேறி தமது வாழ்வாதாரங்களை தேடிக்கொள்ள உரிமை உண்டு என்ற கோட்பாட்டை திரும்பத்திரும்ப கூறிவருகிறது.

வலுவான வரலாற்று கலாசாரப் பண்பாட்டை கொண்ட ஒரு சிறுபான்மை இனத்தின் அடையாளங்களை இல்லாது ஒழிக்கும் வகையில்; சிறிலங்கா- பௌத்த பேரினவாத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்பது தமிழர் தரப்பின் நிலைப்பாடாகும்.

மேலும் சிறுபான்மை இனத்துடனான யுத்தத்தின் தொடர்ச்சியாக யுத்தத்தில் அழிவுகளினால் துவண்டு போயுள்ள தமிழ்மக்களை வறுமையின் கொடூரப்பிடியில் சிறிலங்கா அரசு வைத்திருக்கிறது என்பது தமிழர்களின் குற்றச்சாட்டாகும்

இதற்கு தமிழர் தரப்பு கொடுக்கும் ஆதாரம்

• அவசரமான ஒரு தீர்வு ஒன்றை தமிழர்கள் ஏற்றுகொள்ளவைப்பது,
• அடிப்படை வாழ்வாதாரத்தை வேண்டிநிற்க வேண்டிய நிலையில் மேலும் போராட்டங்கள் குறித்த சிந்தனையை சிதைப்பது,
• உச்ச இராணுவபலத்தை காட்டுவதன் மூலம் அரச சக்தியை தமிழ்மக்களுக்கு புரியவைப்பது
• இவை எல்லாவற்றிக்கும் மேலாக தமிழர்களை அவர்களது வாழ்விடங்களை கைவிட்டு நாட்டைவிட்டு வெளியேற வைப்பது

என பல்வேறுவகையான கருத்துகள் தழிழர்கள் மத்தியிலே நிலவுகிறன.

பயங்கரவாதத்தின் மீதான யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது என அறிவிக்கபட்ட பின்பும் சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக இனரீதியான ஒடுக்க முறையை நடாத்திவருகிறது என்பதை பல்வேறு தகவல்கள் நிரூபித்து வருகின்றன.

வடக்கு கிழக்கில் இடம் பெற்றுவரும் கொலைகள், கொலை மிரட்டல்கள், ஆயுதக்குழுக்களின் அடாவடி அரசியல் நிர்வாகநிலை [anarchical state of political administrations], இராணுவ கெடுபிடி நிர்வாகம் இவற்றின் மூலம் நடைமுறை இயல்பு வாழ்க்கைக்கு சாத்தியமற்ற சட்டதிட்டங்களை குறிப்பிட்ட சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில் அமல்படுத்துதல்,

இதன் ஊடாக வரலாற்று சிறப்புடன் வாழ்ந்த மக்களை வறுமையில் நிரந்தர வாழ்விடமற்ற நிலையில் வைத்திருத்தல் என பல்வேறு தகவல்கள் வெளிநாட்டு செய்தி ஊடகங்களுடாகவும் வெளிநாட்டு அரச பிரதிநிதிகளின் சுற்றுப்பயண அறிக்கைகளின் ஊடாகவும் வெளிவந்திருக்கிறன.

சிறிலங்கா அரசு தனது சார்பு நிலைப்பாடுகளை வெளியுறவு அமைச்சு. ஊடகத்துறை அமைச்சு, மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனை வெளிநாட்டு பரப்புரை நிறுவனங்கள் ஆகியவற்றுடன், முள்ளிவாய்கால் கொலைகளின் போது சரணடைந்து அரச செயற்பாடுகளுக்கு இசைவுடன் செல்ல இணங்கிய போராளிகள் ஆகிய அனைத்து பலத்துடனும் நியாயப்படுத்த முனைந்து நிற்கிறது.

தமிழ் பகுதிகளில் சுதந்திர வெளிநாட்டு செய்தியாளர்கள் வருகைக்கும் தொண்டர் நிறுவனங்களின் நடமாட்டத்திற்கும் அனுமதி கொடுக்காத நிலையில் 'பயங்கரவாதத்தை அழிப்பதில் சிறிலங்காவின் அனுபவம்' குறித்த மகாநாடுகள் மூலம் அனைத்துலக நாடுகள் மத்தியில் தனதுதரப்பு வாதத்தை நிலை நிறுத்த முனைகிறது.

இனஅழிப்பு நடவடிக்கையை பயங்கரவாதத்தின் மீதான வெற்றி என்ற விவாத பொருளாக இவ்வாறு காலங்கடந்த நிலையில் வைத்து சிறிலங்கா அரசு நிலை நிறுத்த பார்க்கிறது.

ஏனெனில் உலகில் ஏற்பட்டு வரும் பதில் வல்லாதிக்க நிலையை உருவாக்ககூடிய இதர வல்லரசுகளுக்கு எதிராக வன்முறை பலத்தால் மட்டும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள முடியாது என்பதை மேலைத்தேய குறிப்பாக அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளர்களும் அனுபவம் மிக்க ராணுவ தளபதிகளும் எழுதிவரும் அறிக்கைகளே தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு பலத்தை பெருக்கி கொள்ளும் அதேவேளை சூழ்ச்சித்திறன் கொண்ட கையாள்கை மூலம் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய diplomatic engagement கொள்கையின் அவசியம் குறித்தும் இவ்வறிக்கைகள் கூறிவந்தன.

பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்ட நாடுகளை வன்முறை மூலம் கட்டுக்கள் கொண்டு வர முற்பட்ட முன்னால் அமெரிக்க தலைவர் ஜோர்ச் டபிள்யு புஷ் தமது ஆட்சிக்காலத்தின் கடைசி பகுதியில் கையாள்கை மூலம் கட்டுக்குள் கொண்டு வரும் கொள்கையையே பெருமளவில் கையாண்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மத்தியகிழக்கில் இடம் பெற்று வரும் பிரச்சனைகளானாலும் சரி தெற்கு தென்கிழக்காசிய பகுதிகளில் இடம்பெறக்கூடிய சீனாவுடனான போட்டி நிலைகளிலும் சரி அமெரிக்கா மிகவும் நிதானமாகவே தந்திரமாக நகர்ந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்துலக பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து உலகில் வளர்ச்சிஅடைந்த நாட்டு தலைவர்கள் மத்தியில் அனைத்துலக வர்த்தகத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய தன்மையும்,

உலகமயமாக்கப்பட்ட பொருளாதார சந்தை நிலையில் ஒரு சிறிய வறிய நாடென்றில் ஏற்படக்கூடிய பாதிப்பு, சிக்கல் மிகுந்த உற்பத்தி கட்டமைப்பில் குறிப்பிட்ட பொருள்களின் கேள்வி அனைத்துலகத்தில் அதிகரித்து விட மறுபுறத்தில் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்திவிடுவதற்கு வாய்புள்ள நிலையும்,

ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதற்கு அப்பால் ஒன்றுடன் ஒன்று பிணைந்த பொருளாதார வளர்ச்சிநிலை நாடுகள் மத்தியிலே உருவாகி வருவதும், நாடுகளின் மீது வன்முறை போக்கை கடைப்பிடிக்க முடியாத நிலையினை பெரும் வல்லரசுகளிற்கு தோற்றுவித்துள்ளது.

இதனாலேயே ஆகாய, இராணுவ, கடற்படைகளின் தயார் நிலையிலிருந்து விலகாது இருக்க வேண்டிய அதேவேளை இதர வகையான கையாழுகைகளின் அவசியம் உணரப்பட்டுள்ளது.

அனைத்துலக நாடுகள் மத்தியிலே பொருளாதாரம் முன்னிலைப் படுத்தபட்டபோதிலும் வல்லரசுகள் மத்தியிலே தலைமைத்துவ பேட்டியும் இடம் பெற்று வருகிறது.

இராணுவ பலம், பொருளாதார பலம், அரசியல் பலம் கொண்ட ஒரு நாட்டை, அதேபிராந்தியத்தில் இன்னெரு நாடு தனது மேம்பட்ட வலிமையை காண்பிப்பதன் மூலம் கொள்ளடக்கி கொள்ள நினைப்பதும் மிக வேகமான அமைதியான முறையில் இடம்பெற்று வருகிறது என்பதையும் மறந்து விடலாகாது.

ஆக இன்று 'பயங்கரவாதம்' என்ற பதத்திற்கு பதிலாக 'மனித உரிமை' என்ற பதம் உலகில் முதன்மை பெறுகிறது. இதற்கு முக்கிய காரணமாக 'கையாளுகை' கொள்கைபெரும் பங்கு வகிக்கின்றது.

இந்த நிலையில் பேரினவாத கொள்கைகளுக்கேற்ப சிறுபான்மை இனத்தின் மீதான வெற்றியை இன்னமும் பயங்கரவாதத்தின் மீதான வெற்றி என காட்ட முயலுகிறது சிறிலங்கா அரசு, புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் சுட்டிகாட்ட முற்படும் இன அழிப்பு என்ற விடயத்தை இதன் மூலம் பின் தள்ளிவிட நினைக்கிறது.

இதேவேளை காலஓட்டத்திற்கு ஏற்றவகையில் சாமர்த்தியம் மிக்க சிறிய, மத்திய தரைகடல் நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளும் வல்லரசுகள் மத்தியிலே இடம் பெறக்கூடிய போட்டி நிலைகளை தமது சொந்த நலன்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவதில் திறமை பெற்றும் வந்துள்ளன என்பதை மறுத்து விட முடியாது.

தேற்காசிய நாடுகளிலே சிறிலங்காவினதும் பாகிஸ்தானினதும் அரச தலைமைகள் இத்தகைய வல்லரசுகளின் கையாளுகைக்குள் உட்படுவதிலும் அந்த கையாளுகையை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதலும் முதன்மை வகிக்கின்றன.

சிறிலங்காவைப் பொறுத்தவரையில் முள்ளிவாக்கால் படுகொலைகள் வரைக்கும் இதனை மிக லாவகமாக பயன்படுத்தி வந்தது. அதன் பின்பும் சிறிலங்கா அரசின் சூழ்ச்சித்திறன் மிக மிக வேகமாக ஆராயப்பட்டு மாறிவரும் உலக நியதிகளின் வரையறைகளுக்கு ஏற்ப சீர் செய்யப்பட்டு நடை முறை படுத்தப்பட்டு வருகிறது.

உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி தமிழின ஒடுக்குமுறை ஒரு உள்நாட்டு விவகாரம் என்பதை நிரூபிப்பதில் விடாப்பிடியாக தற்போதைய சிறிலங்கா அரசு செயற்பட்டு வருகிறது.

உலக வல்லரசுகளை தம் பக்கம் இழுத்து விட பெரு முயற்சிகள் இடம் பெறும் அதேவேளை எதிர் நாடுகள் தலையிடாதவாறு சூழ்ச்சிகள் அமைப்பதிலும் மிக மும்முரம் காட்டுவதுவும் வெளிப்படையாக தெரிகிறது.

உலகமயமாக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் புதிய வர்த்தக உடன்படிக்கைகளில் முனைப்பு காட்டுவதன் மூலம் பக்க பெருளாதார உடன்படிக்கைகளில் சிறிலங்காவை ஈடுபட வைப்பது இதன் பிரதான நோக்கமாகும்.

சிக்கல் மிகுந்த உற்பத்தி கட்டமைப்பில் மேலை நாடுகளுக்கு தேவையான பல பொருட்கள் பொதுவான ஓரு உடன்படிக்கை மூலம் பிரதான ஒரு சந்தைக்கு விற்கப்படுவதும், உதாரணமாக கொங்கொங்கில் உள்ள உற்பத்தி உடன்படிக்கைகளை விற்கும் சந்தை நிறுவனங்கள் மூலம் மொத்தமாக பெற்று கொள்ளப்பட்ட உற்பத்தி அதிகாரம் சீனாவில் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்பாக அந்த பொருளை உருவாக்குவதற்குரிய இதர பொருட்கள் பல்வேறு சிறிய நாடுகளிலும் தயாரிக்கப்படுகின்றன.

இத்தகைய பக்க உடன்படிக்கைகளை பெற்று கொள்வதில் வங்காளதேசம் வியட்நாம் தாய்லாந்து போன்ற நாடுகள் முன்னணி வகிக்கின்றன. இந்த வகையில் மலிவான ஊதியத்தொகை மூலம் மேலைத்தேய வர்த்தகத்தில் சிறிய நாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

சிறிலங்காவை இத்தகைய உலகின் பொருளாதார பங்களிப்பில் கலந்து கொள்ள வைப்பதன் மூலம் சிறிலங்காவை பொருளாதார முடக்க நிலைக்கு கொண்டு செல்வதை தடை செய்வது பிரதானமான நோக்கமாகும்.

அதேவேளை உலக சந்தையில் தேயிலையின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதாலும் சிறிலங்கா தேயிலை உற்பத்தி மூலம் தற்போது பிரதான வருவாயை பெற்று வருகிறது. இதுவும் சிறிலங்காவின் பொருளாதாரத்தை தக்க வைத்து கொள்வதற்கு பெரும் உதவியாய் அமைந்துள்ளது.

புலம் பெயர் தமிழர்களின் செயற்பாடுகளும் தமிழ் நாட்டு அரசின் அண்மைய தீர்மானமும் சிறிலங்கா அரசின் பொருளாதாரம் குறித்த செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வைக்கும் என்பதில் ஐயம் இருக்க முடியாது.

இதற்கு ஏற்றாற்போல் உலகின் கிழக்குப் பாதி நாடுகளில் அதிக கவனம் செலுத்தி ஒப்பந்தங்கள் கொண்டு வருவதில் கூடிய கவனம் செலுத்தப்படுகிறது.
புலம் பெயர் தமிழர்களில் பலர் சிறிலங்காவை பொருளாதார ரீதியாக முடக்க வேண்டும் என்ற வாதத்தை கொண்டிருப்பதுவும் மறைக்க கூடிய தொன்றல்ல.

இத்தகைய செயற்பாட்டாளர்களை ஏய்க்கும் வகையில் இரகசியமான வர்த்தக முகவர்கள் மூலம் சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட நேரடி நுகர்வுப்பொருட்கள் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் மூலமாகவே சந்தைப்படுத்தும் நிலை முனைப்பு பெற்று வருவதையும் பல தமிழ் செயற்பாட்டாளர்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

சிறிலங்காவின் பொருளாதாரத்தை முடக்க முனையும் புலம்பெயர் தமிழர்கள் தமது செயற்பாட்டை தீவிரப்படுத்தாத நிலை கூட இந்த ஊடுருவல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும் புலம் பெயர் தமிழர்களின் மனோநிலை குறித்து ஒரு தமிழ்நாட்டு தமிழர் ஒருவரின் பார்வையூடாக விபரிப்பது மிக பொருத்தமானதாகும்.

ஈழத்தமிழர் விவகாரத்தை தமிழ்நாட்டு தமிழர் ஒருவர் குறிப்பிடும் போது “கொடிய சிங்கள அரசின் கைகளில் இருந்து எம் சகோதரங்கள் வதை படுகின்றனரே என்ற ஆழ்ந்த கவலை தெரிவிக்கும் அதேவேளை இங்கே வெளிநாடுகளிலே சிறிலங்கன் உணவகங்களையும் சிறிலங்கன் மளிகைகடைகளையும் பெயர்பலகையில் பார்க்கும் போது பெரும் குழப்பமாய் இருக்கிறதே” என்று குறிப்பிட்டார்.

வதைபடும் ஈழத்தமிழர்கள் தம்மை வதைக்கும் நாட்டையே பிரதிநித்துவப்படுத்தும் வகையில் வர்த்தக நிலைகளின் பெயர்பலகைகள் வைத்து கொள்வது எந்த வகையில் தகும் என்று அந்த தமிழ்நாட்டு தமிழர் கேட்பதில் தவறில்லைத்தான்.

புலம் பெயர் ஈழத்தமிழர்கள் தம்மைத்தாமே பிரதிநித்துவம் செய்வது போன்ற செயற்பாடுளில் இறங்குவது சிறிலங்கா அரசு மீதான பொருளாதார தடை குறித்த தமிழ்நாட்டு அரசின் முன்மொழிவுக்கு வலு சேர்ப்பதாக அமையும் என்பதுவும் உண்மைதான்.

2015ம் ஆண்டளவில் சிறிலங்கா மேலைதேய நாடுகள் மீதான தனது பொருளாதார தங்கு நிலையை 61 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக குறைத்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.

வளர்ந்து வரும் இந்திய, சீன, கிழக்காசிய, தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்துடன் தன்னை இணைத்து கொள்வதனூடாக மேலைநாடுகளில் பெருமளவில் தங்கி இருப்பதை தவிர்த்து கொள்வது சிறிலங்காவின் திட்டமாக இருந்தாலும்,

வெளியே சென்ற பொருளாதார நிதி வளங்களை மீண்டும் உள்நோக்கி திருப்பி விடுவதன் மூலம் தமது பொருளாதாரத்தை சரிசெய்து கொள்வதில் மேலை நாடுகள் மிக நுண்னிய வலிமை வாய்ந்தவை. இந்த வகையில் திடீரென வளர்ச்சிநிலையை காட்டும் சிறிலங்காவின் அண்மைக்கால பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க கூடியவகையில் கொழும்பு பங்கு சந்தை மீது தமது செல்வாக்கை செலுத்த முனைகின்றன.

அதேவேளை பங்கு சந்தை குறித்த அறிவை உள்நாட்டு மக்கள் மத்தியில் ஊட்டுவதற்கும் மக்களை சிறிலங்கா நிறுவனங்களின் பங்குகளின் மீது நிதிமுதலீடு செய்து கொள்வதற்கு குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் பங்களிப்புக்கு ஆர்வமூட்டும் படியும் ஆலோசனைகள் கூறிவருகின்றன.

இலங்கைத்தீவிலேயே வடக்கு கிழக்கு மக்களின் நிதி சேமிப்பு குறித்து சிறிலங்கா வங்கிகள் நன்கு அறிவார்கள் இதிலே புலம் பெயர் மக்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதுவும் எமக்கு நன்கு தெரியும்.

இவ்வகையிலே சிறிலங்கா நிறுவனங்களின் பங்குகளை வடக்கு கிழக்கு தமிழர்கள் கொள்வனவு செய்ய வைப்பதும் இதன் மூலம் தமிழருக்கும் கொழும்பிற்கும் இடையில் முதலீட்டு தொடர்புகளை உருவாக்குவதும், தற்காலிகமாக வளர்ந்துவரும் சிறிலங்காவின் பெருளாதார வளர்ச்சியிலே தமிழ்மக்களை பங்கு கொள்ள வைப்பதுவும் இதன் அடிப்படையாகும்.

இவ்விடத்தில் கொழும்பு பங்கு சந்தையிலே இலண்டன் பங்கு சந்தை முதலீடு செய்து கொண்டுள்ளது என்பது குறிப்பிட தக்கதாகும்.

புலம்பெயர் தமிழர்கள் தமது பொருளாதார நலன்கள் மீது அதிக கவனம் செலுத்தி கூட்டு முயற்சிகள் மூலம் செயற்படவேண்டிய நிலைமையை வலியுறுத்தும் வகையில் கொழும்பிலிருந்து வெளிவரும் சில பத்திரிகைகள் வடக்கு கிழக்கிலிருந்து புலம் பெயர்ந்து அனைத்துலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பொருளாதார பலம் குறித்த ஆய்வுகளில் இறங்கி இருந்தன.

சில கட்டுரைகள் புலம் பெயர் தமிழர்களின் பொருளாதார பலம் சிறிலங்கா அரச பொருளாதாரத்திலும் பார்க்க பன்மடங்கு பெரியது என்று கூட எழுதி இருந்தன.

சில கட்டுரைகள் புலம் பெயர் தமிழர்கள் கூட்டாக முயற்சிப்பார்களேயானால் சிலங்கா அரசு அரசியல் ரீதியான நெருக்கடிகளை அனைத்துலக மட்டத்தில் பாரிய அளவில் எதிர் நோக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்திருந்தனர்.

இவர்களுடைய எதிர்பார்ப்பு சரியாக இருக்குமாயின் சிறிலங்கா அரசுக்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சட்ட பூர்வமான நிதி அமைப்பொன்றை உருவாக்குவது பெரும் தலையிடியை கொடுக்க வல்லது எனலாம்.

புதிதாக உருவாக கூடிய எந்த நிறுவனமும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கலாம். குறிப்பாக நிதி நிறுவனங்கள் அதுவும் தமிழர்கள் மத்தியில், சிறிலங்கா அரச ஊடுருவல்களுக்கூடாக மிகவும் கடினமான பாதையாகவே தென்பட்டாலும் எப்பொழுதும் எதற்கும் ஒரு தொடக்க புள்ளி உள்ளது.

உலக தமிழர்கள் மத்தியிலே நிதிசார் அமைப்பு ஒன்றின் தேவை தேலும் பல்வேறு விடயங்களால் நியாயப்படுத்தப்படலாம்.

இலங்கைப் பிரச்சனையில் பிரதான செல்வாக்கு செலுத்த கூடிய வல்லரசுகளின் பார்வையில் இது யுத்த மீறல் சம்பவங்களாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக சிறிலங்காவை தமது கையாள்கை கொள்கைகளுக்குள்ளேயே வல்லரசுகள் வைத்திருக்க விரும்புகின்றன.

இதன் பொருட்டே சிறிலங்காவை தமது நிரந்தர நட்பு நாடாக கூறுவதற்கு கூட அவை தயங்கவில்லை.

இந்த நிலையில் சிறிலங்கா மீதான மனித உரிமை மீறல் குற்றசாட்டுகளை படரவிட்டிருப்பது என்பது வல்லரசுகள் தமது நலன்களுக்கு ஏற்புடையதாக சிறிலங்கா அரசு மாறவேண்டும் என்பதற்காகவே ஆகும்.

இச்சந்தர்ப்பத்தை ஏற்ற வகையில் பயன்படுத்துவது தமிழர் தரப்பின் கைகளில் தங்கி இருக்கிறது என்பதை பல்வேறு தமிழ் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.
மேலும், வெளிவந்த தமிழ் ஆய்வாளர்களின் கட்டுரைகள் மற்றும் செய்திகளில் சில குறிப்புகளை தேர்ந்து எடுத்ததன் அடிப்படையில்:

• புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளையும் தாயக தமிழர்களின் பிரதிநிதிகளையும் தமிழ்நாடு தமிழர்களையும் வேறுவேறு தளங்களில் இப்பகுதியினருக்கு இடையில் தொடர்புகள் எதுவுமற்ற நிலையில் வெளியுறவு அதிகாரிகளை குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்திற்கான பதில் செயலர் அவர்களை சந்தித்துள்ளார்.
• தாயகத்தமிழர்களின் பிரதி நிதிகளுக்கு பேச்சு வார்த்தைகளை கைவிடாது தொடர்ந்து பேசம்படி அதே வெளியுறவு அதிகாரிகளால் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
• தாயக தமிழர்கள் என்ன தீர்ப்பளிக்கிறார்களோ அதனை ஏற்று கொள்ளும் வகையில் புலம் பெயர் தமிழர்கள் தலைவர்கள் செயற்பட தயாராக உள்ளனர்.
• தாயக தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு தமிழர்ளையும் ஒருங்கிணைத்ததான செயற்பாடுகள் எதுவும் தமிழர் வரலாற்றில் இடம் பெற்றதில்லை.
• பொருளாதார ரீதியாக தாயக தமிழர்கள் மிக கீழ்மடத்தில் வாழுகிறார்கள்
• தமிழ் நாட்டில் அரசின் மீது அழுத்தம் பிரயோகிக்க கூடிய சக்திகளும் தமிழ் நாடு அரசும் தற்போது ஈழத்தமிழர்களது உரிமையை மையமாக கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளன இந்நிலையில் தற்போதய இந்திய மத்திய அரசும் குறிப்பிடதக்க அழுத்தத்தை எதிர் கொண்டுள்ளது.

இத்தகைய குறிப்புகளின் அடிப்படையில் தமிழர்களின் செயற்பாட்டில் தெற்காசியாவில் செல்வாக்கு செலுத்தகூடிய பல சக்திகள் தமிழர் விவதாரத்தில் அதி கவனம் செலுத்துகின்றன.

ஆனால் தமிழர்களோ நிலைமை சாதகமாக தெரிவதாக உள்ளது என்று சந்தோசத்தில் கிடக்கின்றது.

இந்திய மத்திய அரசின் மற்றும் சிறிலங்கா அரசின் நிலையிலிருந்து பார்க்கும்போது மீண்டும் தமிழர்கள் மத்தியில் பாரிய பிளவு ஒன்றின் தேவை அவசியமாக கருதப்படுகின்றது.

அண்மைக்காலத்தில் மனித உரிமை என்ற சொற்பதம் குறிப்பாக அரபு நாடுகளுக்கு பெரும்தலையிடியாக பார்க்கப்பட்டது. மனித உரிமை என்ற ஆயுதத்தை எதிர் கொள்ள பொருளாதாரப்பலமே பதில் ஆயுதமாக பயன்படுத்த பட்டு வந்துள்ளது. இதற்கு சவுதி அரேபியாவினை நல்ல உதாரணமாக கொள்ளலாம்.

சவுதி அரேபியாவில் ஏனய அரபு நாடுகள் போன்றே மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது தனிமனிதர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் போராட்டம் சவுதி அரேபியாவில் தற்போதைக்கு பிசு பிசுத்து போனது.

மிகவறுமை நிலையில் பெருளாதார ஊட்டத்திற்காக காத்துகிடக்கும் ஈழ தமிழர்களுக்கு மீண்டும் முன்பு ஒருமுறை கொடுக்கப்படாது விடப்பட்ட நான்கு பில்லியன் உதவித்தொகையை வெளிகொணர்வதுடன் வெளிநாடு ஒன்றின் கண்காணிப்பில் பகிர்ந்தளிக்கப்படும் எனும் நிலை ஏற்படும்போது புலம் பெயர் தமிழர்களுக்கும் தாயக தமிழர்களுக்கும் தமிழ்நாடு தமிழர்களுக்கும் இடையில் பல்வேறு இடைவெளிகள் தோன்றுவதற்கு வாய்புகள் உள்ளன.

ஏற்கனவே நிலப்பறிப்பு குடியேற்ற திட்டங்கள் என தயார்படுத்திவரும் சிறிலங்கா அரசு வடக்கு கிழக்கு மக்கள் என்ற வகையில் குடியேறிய சிங்கள சமுதாயத்தின் பக்கம் நிதியை திருப்பிவிட காத்துகிடக்கிறது.

இத்தகைய நிலைமைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தாயக தலைமையையும் இணைத்ததான ஒரு நிதி நிறுவனம் ஒன்றின் தேவை மிக அவசியமானதாகப்படுகிறது.

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்து எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk
uthayan

பிளவுகளால் வீழ்பவர்கள்
தமிழன் என்றொரு இனமுண்டு தனியே; அவர்க்கொரு குணமுண்டு என்று தமிழ்ப்பாடல் ஒன்று உள்ளது. தமிழர்களின் தனித்துவமான குணம் என்ன வென்றால் தங்களுக்குள் தாங்களே மோதி அழிந்து போவது தான். சேர, சோழ, பாண்டியர் மூவரும் தங்களுக்குள் போரிட்டு அழிந்த வரலாறு காலாதி காலத்துக்கும் இருக்கிறது.தமிழர்களின் ஒற்றுமையின்மையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழர்களை அடக்கியாள்வதில் எதிரிகள் வெற்றி கண்டனர். தமிழர்களின் வரலாறு முழுவதும் இதை நாம் கண்கூடாகக் காணலாம்.



இலங்கையிலும் தமிழர்களுக்கு இன்று வரை உரிமைகளெதுவும் கிடைக்காமலிருப்பதற்கு தமிழ் அரசியவாதிகள் தான் காரணமேயன்றி நிச்சயமாக சிங்களவர்கள் அல்லர். இராமநாதனும், அருணாசலமும் தூரநோக்குடன் சிந்தித்துச் செயல்பட்டார்கள். ஆனால் இவர்களின் வாரிசுகளான நடேசபிள்ளையும், மகாதேவாவும் சிங்களத் தலைவர்களை நம்பி ஏமாந்தனர். அல்லது தமது சுய நலத்துக்காகத் தமிழ்ச் சமுதாயத்தைப் பயன்படுத்தினார்கள்.

பிளவு அரசியல்
ஜி.ஜி.பொன்னம்பலம் சம பிரதிநிதித்துவக் கோரிக்கையை முன்வைத்த போது நடேசபிள்ளை, மகாதேவா போன்றவர்களின் உதவியுடன் டி.எஸ்.சேனநாயக்கா சமபலப் பிரதிநிதித்துவக் கோரிக்கையை முறியடித்தார்.இலங்கை சுதந்திரமடைந்த போது அதனை வழங்கிய சோல்பரி பிரபுவைச் சமாளிப்பதற்காக அடங்காத்தமிழன் என அழைக்கப்பட்ட பேராசிரியர் சுந்தரலிங்கத்துக்கு அமைச்சர் பதவி வழங்கித் தன்னுடன் இணைத்துக் கொண்டார் டி.எஸ்.சேனநாயக்க. பொன்னம்பலமும், செல்வநாயகமும் தன்னை அரசியலில் தலையெடுக்க விடாமல் தனக்கெதிராகச் செயற்பட்டு வந்ததாலேயேதான் டி.எஸ்.சேனநாயக்காவின் அமைச்சரவையில் (சுதந்திர இலங்கையின் முதலாவது அமைச்சரவை) தான் அமைச்சராக இணைந்துகொண்டார் என்று சுந்தரலிங்கம் எழுதியுள்ளார். (பார்க்க Eeylom Beginnings by C.Suntharelingam ) தனது சமபலப் பிரதிநிதித்துவக் கோரிக்கையை தமிழ் மக்கள் ஆதரிக்காமையால் ஜி.ஜி.பொன்னம் பலமும் டி.எஸ்.சேனநாயக்காவின் அமைச்சரவையில் இணைந்துகொண்டார்.

இந்திய, பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். சுந்தரலிங்கம் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு அடங்காத் தமிழர் ஒற்றுமை முன்னணியை ஆரம்பித்தார். இந்த மூவரும் மூன்று விதமான கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் நடத்தினர். செல்வநாயகம் சம்ஷ்டி ஆட்சி முறையே இலங்கைக்குப் பொருத்தமான தீர்வு என்றார்.

முக்கோண அரசியல்
சுந்தரலிங்கம் தனிநாடு தமிழ் ஈழக் கோரிக்கையை முன் வைத்தார். பொன்னம்பலம் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார். இவ்வாறு மூன்று அரசியல் வாதிகளும் மூன்று கோணங்களில் நின்று அரசியல் நடத்தினர்.தமிழ் அரசியல்வாதிகள் மூவரும் மூன்று கோணங் களில் நின்று அரசியல் நடத்திக் கொண்டிருக்க சிங்கள அரசியல்வாதிகள் தம்முடன் இணைந்திருந்த தமிழ் அரசியல்வாதிகளையும் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயற்பாடுகளைக் கனகச்சிதமாக நிறை வேற்றினர்.
தங்களுக்கிடையில் என்னதான் போட்டி, பூசல் கள் இருந்தாலும் தமிழர்களை ஒடுக்குவது என்ற விட யத்தில் மட்டும் சிங்கள அரசியல்வாதிகள் அனை வரும் போட்டி போட்டிக்கொண்டு (நீயா நானா கூடுதலாக தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பது என்று) செயற்பட்டனர்.தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது நானா நீயா முதலில் அதை அமுல்படுத்துவது என்ற போட்டியே இரு பிரதான கட்சிகளிடையேயும் காணப்பட்டது கடைசியில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. தனிச் சிங்களச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.

தமிழின அடக்குமுறை
1972 ஆம் ஆண்டு இலங்கையைக் குடியரசு நாடாக்கியதன் மூலம் சோல்பரி அரசமைப்பின் கீழ் சிறுபான்மையினங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை இல்லாமல் செய்தது அப்போது பதவியிலிருந்த சிறிமா அரசு. தமிழரசுக் கட்சியின் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட சி.எக்ஸ்.மார்ட்டின், நியமன நாடாளுமன்ற உறுப்பி னரான எம்.சி.சுப்பிரமணியம் உட்பட அப்போது ஆளும் கட்சியை ஆதரித்து வந்த தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசுக்கு ஆதர வாக வாக்களித்தனர்.
1978 ஆம் ஆண்டு அரசமைப்பின் மூலம் விகி தாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை அறி முகம் செய்து சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைப்பதற்கு வழி வகுத்தார் ஜே.ஆர்.ஜெய வர்த்தன. ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சிப்பீடமேறிய ஜே.ஆர். அவசரகாலச்சட்டம், பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றித் தமிழர்களை ஆயுத பலத்தால் ஒடுக்க முயற்சித்தார்.
ஜே.ஆருக்குப்பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி கள் அனைவரும் தாம் ஜே.ஆருக்குச் சற்றும் சளைத் தவர்களல்லர் என்பது போல் தமிழ் இன அழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.
இந்தியாவின் அழுத்தத்துக்குப் பணிந்து ஜே.ஆர். மாகாண சபைகளை உருவாக்கிய போதும் அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதிகள் மாகாண சபைகளின் அதிகாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப்பறித்ததுடன் வடக்கையும் கிழக்கையும் சட்டபூர்வமாகப் பிரித்தும் விட்டனர்.

தொடரும் தமிழர் ஒழிப்பு
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரே டி.எஸ்.சேனநாயக்கா பதவியாவில் சிங்களக்குடியேற் றத்தை ஆரம்பித்தார். இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்ததும் கந்தளாயில் குடியேற்றத் திட்டத்தை ஆரம்பித்தார்.
டி.எஸ். சேனநாயக்கா ஆரம்பித்த குடியேற்றத் திட்டம் சேருவில, வெலி ஓயா (மணலாறு) என தொடர்ந்து நாவற்குழி வரை வந்துவிட்டது. தமிழ் நாட்டை முன்பு ஆட்சிசெய்த ""நாயக்கர்'' பரம்பரை யில் வந்த சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா (பண் டார நாயக்காவின் மூதாதையர்கள் தமிழர்களே) இலங்கையில் முதல் தடவையாகத் தமிழர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிட்டார். 1958 ஆம் ஆண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடா ளுமன்றத்துக்கு முன்னால் அமர்ந்து சத்தியாக்கிரகம் செய்த போது சிங்களக்காடையர்களால் தாக்கப்பட்டனர்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு (முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் உட்பட) மண்டை உடைந்தது. இதனை அவதா னித்த ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர் பண்டாரநாயக் காவிடம் ஓடிச்சென்று (பண்டாரநாயக்கா அப்போது காரில் நாடாளுமன்றத்துக்கு வந்துகொண்டிருந்தார்) தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மண்டை உடைந்து இரத்தம் வழிகிறது என்றார். உடனே பண்டாரநாயக்கா "கொஞ்சம் ருசி பார்க்கட்டும்'' என்றாராம்.
பண்டாரநாயக்காவுக்கு தான் சற்றும் சளைத்தவர் அல்லர் என்பது போல் ஜே. ஆரும் 1977, 83 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டார். பண்டாரநாயக்கா ஆரம்பித்த தமிழின அழிப்பு நடவடிக்கை இன்று வரை தொடர்கிறது.

தமிழ் ஆயுதப் போராட்டம்
இலங்கை அரசால் தமிழர்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளைக் கண்டு மனம் வெதும்பிய தமிழ் இளைஞர்கள் முப்பத்திரண்டு ஆயுதக்குழுக்களாக உருவெடுத்து தமிழர்களுக்குத் தனிநாடு பெற்றுத் தரப்போவதாகக் கூறிக்கொண்டு வன்செயல்களில் ஈடுபட்டனர். இவர்கள் சிங்கள இராணுவத்துக்கெதிராக அல்லது அரசுக்கெதிராகப் போராடினார்களோ இல்லையோ தமிழ் மக்களைக்கொலை செய்வதில் மட்டும் (மரண தண்டனை தீர்ப்பு வழங்குவது) பின்னிற்கவில்லை.
எழுபதுகளின் நடுப்பகுதியில் ஆரம்பித்த, தமிழர்களே தமிழர்களைக் கொல்லும் நடவடிக்கை 2009 மே மாதம் பதினெட்டாம் திகதியுடன் முடி வடைந்துவிட்டது.இப்போது இலங்கைத் தமிழர்கள் "அடிமைகள்'' என்பதை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் கூறிவிட்டார். ஆனால், தமிழர்களின் பிரதிநிதிகள் என்று தம்மைக் கூறிக்கொண்டு தமது சுயநலத்துக்கு காக அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் சிலர் இன்னும் அதனை ஏற்கக்காணோம்.

சிதைந்து கிடக்கும் அரசியல் தலைமை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முரண்பாடு சீ.வி.கே., சிற்றம்பலம், குலநாயகம் போன்றோரின் அறிக்கைகள் ஒரு புறம். மறுபுறம் தமிழ்தேசியக் கூட்டமைப்பு அலுவலகங் கள் திறக்கப்படும் அதே இடங்களில் தமிழரசுக்கட்சி அலுவலகங்களும் திறக்கப்படுகின்றன.

மறுபுறத்தில் பொன்னம்பலத்தின் பேரன், கஜேந்திரன், பத்மினி கூட்டு. இந்த இரு அணிகளிலும் இடம்பெறாமல் சிவாஜிலிங்கம் தனித்தவில். இந்த மூன்று அணிகளையும் விட்டு விட்டு டக்ளஸ், கருணா, பிள்ளையான், கே.பி. ஆகிய அரச அடிவருடி கள் அணி இன்னொருபுறம். இவர்களுக்குள்ளும் ஒற்றுமை கிடையாது. ஒருவரை ஒருவர் கருவறுக்க மஹிந்தருக்குத் துதிபாடுவதே ஒவ்வொரு குழுவுக்கும் இடையிலான போட்டி.

மேலே கூறப்பட்ட அனைவரும் தமிழ்மக்களுக் காகத் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துப் போராடுகின்றனர். இவர்களில் பலர் ஏற்கனவே ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள். இவர் களால் தமிழர்களுக்கு ஏதாவது விமோசனம் கிட் டுமா? ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக சிங்கள பேரினவாதம் ஓரணியில் திரண்டுள்ளது. பஞ்ச சீலத்தைப் பின்பற்றும் புத்த பிரானின் சீடர் ஒருவர் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இரத்தத்தால் கையொப்பமிட்டுள்ளார்.தக்க தருணத்தில் அல்லது தமிழர்களை அழிப் பதில் ஒன்று பட்டுச்செயற்படும் சிங்கள அரசியல் வாதிகள் எங்கே? சுயநலவாதிகளான தமிழ் அரசியல் வாதிகள் எங்கே? சுயநலவாதிகள் என்று அன்று முதல் இன்றுவரை அரசியலில் ஈடுபட்ட, ஈடுபட்டிருக்கும் அனைத்துத் தமிழ் அரசியல்வாதிகளையும் தான் கூறுகிறேன்.
thanx-infotamilஜெயலலிதாவின் போர்க்குரலையும்:
"தமிழ்நாட்டில் இருந்து எழுந்துள்ள பேரெழுச்சிகளையும்" இந்திய, இலங்கை அரசுகள் எவ்வாறு கையாளப் போகின்றன?
[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 06:34.58 மு.ப | இன்போ தமிழ் ]


ஜெயலலிதாவின் போர்க்குரலும் இந்திய இலங்கை அரசுகளும்

"...............................சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது இலங்கை அரசுக்குப் புதியதோர் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. இது இலங்கை அரசுக்கான சிக்கல் மட்டுமல்ல இந்திய அரசுக்கான சிக்கலும் கூட. இலங்கை அரசுக்கு வெளிப்படையாக ஆதரவை வெளிப்படுத்துவதில் இந்தியாவுக்கு சிக்கல் உள்ளது. அப்படிச் செய்தால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களினதும் கருத்தை நிராகரிப்பதாக அமைந்து விடும். ஏனென்றால் இந்தத் தீர்மானம் ஒருமனதாகவே நிறைவேறியுள்ளது. கட்சி வேறுபாடுகளின்றி இதற்கு ஆதரவு கிடைத்துள்ளது. எனவே இந்திய மத்திய அரசுக்குப் பெரும் சங்கடம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதேவேளை இலங்கை அரசுக்கு அது ஒருமிரட்சியைக் கொடுத்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது.............................."
- இன்போ தமிழ் குழுமம் -

இனி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்களைப் போர்க்குற்றவாளிகள் என்று ஐ.நாவை அறிவிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்களே தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. [அழுத்தவும் தொடர்புபட்ட செய்தி ]

இந்தத் தீர்மானம் கடந்த புதன்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்படவுள்ளது என்ற தகவல் யாருக்குமே தெரியாது.

அன்று காலையில் தான் அந்த விவகாரம் பற்றி அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கே தெரிந்தது.

அந்தத் தீர்மானத்தை வெளியே கசிய விடாமல் காப்பாற்றியவர் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தான்.

அவரே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததால் அதுபற்றிய செய்திகள் எதுவும் வெளியே வரவில்லை. இந்தத் தீர்மானம் இவ்வளவு விரைவாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதே உண்மை.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர், அவர் முன்னர் கூறியது போன்று இலங்கை அரசுக்கு எதிரான எந்தக் கருத்தையோ, நகர்வையோ வெளிப்படுத்தவில்லை என்ற ஆதங்கம் பலரிடம் இருந்து வந்தது.

குறிப்பாக வைகோ போன்ற ஈழத்தமிழர் ஆதரவு சக்திகள் ஆளுனர் உரையில் கூட இது பற்றி ஒன்றுமேயில்லை என்று விமர்சித்திருந்தனர். ஆனால் ஜெயலலிதா பொறுமையாக இருந்து இந்த அதிரடி நகர்வை எடுத்துள்ளார். மிகவும் முக்கியமானதோர் தருணத்தில் இந்த நகர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழு கொழும்பு வரப் போவது உறுதியான பின்னர் தான் அவர் இந்த நகர்வில் இறங்கினார்.

நிருபமா ராவ், சிவசங்கர் மேனன், பிரதீப் குமார் ஆகியோரை உள்ளடக்கிய குழு அடுத்தவாரம் அதாவது 16,17ம் திகதிளில் தான் கொழும்பு வரும் என்று தான் முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென இந்தக் குழு 10ம் திகதி வரப்போவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான கையோடு தான் ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

சட்டப்பேரவையில் இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.

இப்போது அது நிறைவேற்றப்பட்டு விட்டது.

அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆனால் மத்திய அரசின் கையில் தான் எல்லாமே இருக்கிறது

தமிழ்நாடு மாநில அரசினால் இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாது.

அவர்களால் செய்யக் கூடியது இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதை மட்டும் தான்.

ஆனால் மறைமுகமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்ற நிலையில் தான் மாநில அரசு இருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ள பாரிய வெற்றி தான் இந்தப் பலத்தைக் கொடுத்துள்ளது.

திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வியும், திமுக சார்ந்தவர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளும் மத்திய அரசிடம் இருந்து அதனை வெகுதூரம் விலகிக் கொண்டு செல்ல வைத்திருக்கிறது.
இதன் அடுத்த கட்டம் அதிமுகவுடனான கூட்டணியாக விரிவடையலாம்.

மத்தியில் ஆட்சியிலுள்ள காங்கிரசும் அதையே தான் விரும்புகிறது.

இந்தநிலையில் ஜெயலலிதா சக்திவாய்ந்த ஒருவராக இந்திய அரசியலில் மாறுகின்ற நிலை காணப்படுகிறது.

இது இலங்கை அரசுக்கு சங்கடமான சூழலை உருவாக்கும்.

எப்போதும் இந்தியா எம்மைக் கைவிட்டு விடாது தேவையான போதெல்லாம் உதவுகிறது என்றெல்லாம் கடந்தவாரம் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என்பதை ஜெயலலிதா மத்திய அரசுடன் கூட்டணி வைத்துக் கொண்ட பின்னர் தான் புரிந்து கொள்ள முடியும்.

இந்தக் கட்டத்தில் இலங்கை அரசும் ஜெயலலிதாவை வளைத்துப் போடும் முயற்சிகளில் இறங்கியதும், இறங்கியிருப்பதும் உண்மையே. முன்னாள் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மூலம் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியுள்ளார் மிலிந்த மொறகொட. இது இலங்கை அரசுக்கு எதிரான நகர்வுகளைத் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாகவே தெரிகிறது. ஆனாலும் அந்தச் சந்திப்பையும் மீறியே ஜெயலலிதா சட்டசபையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.

ஜெயலலிதா மத்திய அரசில் பங்காளியாகும் வரை இலங்கை அரசை இதற்கு மேல் ஆட்டிப் படைக்க முடியாது.

இல்லையேல், இலங்கை அரசுக்கு எதிராக அவரே ஒரு போராட்டத்துக்கு தலைமையேற்க வேண்டியிருக்கும்.

ஆனால் அது சாத்தியமா என்பது தெரியவில்லை.

மத்திய அரசில் இணைந்து கொண்டால் ஜெயலலிதாவினால் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

அது உடனடி சாத்தியமான விடயமாகத் தெரியவில்லை.

இப்போதைய நிலையில் இந்தத் தீர்மானம் தமிழரைப் பொறுத்த வரையில் பெரியளவில் தாக்கம் எதையும் ஏற்படுத்த வாய்ப்புகள் இல்லை.
ஆனால் இது ஒன்றும் புறம் ஒதுக்கி விடக் கூடிய விவகாரம் அல்ல என்பதையும் கவனித்தாக வேண்டும்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கடந்தமாதம், இந்தியாவின் எந்தவொரு மாநில அரசுடனும் இராஜதந்திர தொடர்புகளையும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறியிருந்தார்.

இப்போது தமிழ்நாட்டுடனான இராஜதந்திரத் தொடர்புகளுக்கு அரசாங்கம் முனைகிறது.

தமிழ்நாடும், இலங்கையும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவை.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது இலங்கை அரசுக்குப் புதியதோர் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. இது இலங்கை அரசுக்கான சிக்கல் மட்டுமல்ல இந்திய அரசுக்கான சிக்கலும் கூட. இலங்கை அரசுக்கு வெளிப்படையாக ஆதரவை வெளிப்படுத்துவதில் இந்தியாவுக்கு சிக்கல் உள்ளது. அப்படிச் செய்தால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களினதும் கருத்தை நிராகரிப்பதாக அமைந்து விடும். ஏனென்றால் இந்தத் தீர்மானம் ஒருமனதாகவே நிறைவேறியுள்ளது. கட்சி வேறுபாடுகளின்றி இதற்கு ஆதரவு கிடைத்துள்ளது. எனவே இந்திய மத்திய அரசுக்குப் பெரும் சங்கடம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதேவேளை இலங்கை அரசுக்கு அது ஒருமிரட்சியைக் கொடுத்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டில் இருந்து எழுந்துள்ள இந்தப் போர்க்குரலை இந்திய, இலங்கை அரசுகள் எவ்வாறு கையாளப் போகின்றன?

இதனை அடக்கப் போகின்றனவா, அனுசரித்து நடக்கப் போகின்றனவா என்பதே இப்போது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
கட்டுரையாளர் ஹரிகரன் இன்போ தமிழ் குழுமம்
info@infotamil.ch

தொடர்புபட்ட செய்தி

"தமிழீழமே தமிழரின் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு" என்று கூறிய "முதல்வர் ஜெயலலிதா" என்ன செய்யப் போகின்றார்...........?

இந்திய அழுத்தத்துக்கு பணிய மறுக்கிறார் மகிந்த - இராஜதந்திர மோதல்கள் உருவெடுக்கலாம்: கொழும்பு வாரஇதழ்

அடடா... சிங்கள அரசுக்கும் - இந்திய அரசுக்கும் தமிழர் நலன் மீதுதான் எவ்வளவு கரிசனம்!
இவை தவிர மேலும் பல செய்திகளுடன், எமது செய்தித்தளம்

[செய்திகளில் நம்பகத்தன்மையையும், அவற்றை வெளியிடுவதில் தனித்துவத்தையும், ஊடகவியலில் ஒரு தரத்தையும் "புதினம்" தளத்தில் பேணிய நாங்கள் - அதே நம்பகத் தன்மையையும், தனித்துவத்தையும், தரத்தையும் "புதினப்பலகை"யிலும் தொடர்ந்தும் பேணுவோம்]





திங்கட்கிழமை, 13 யூன் 2011
பிந்திய செய்திகளும் ஆய்வுகளும்
உரிய இலக்கை எட்ட முடியாது போன......?
நேர்மையாக மக்கள் மீது பற்றிருந்தால்: இனிமேலும் பிரபாகரன் வருவார் என்பதை மட்டும் முன்வைத்து அரசியல் நாடகம் போட வேண்டாம்?
ஒரு சிங்கள வெறியன் கூறுவதுதான் மிகவும் கோரமானது: "இவளது முலைகளை நான் வெட்டியெடுக்க விரும்புகிறேன்"
சிறிலங்கா - ஆதாரங்கள் புதைக்கப்பட முடியாதவை: த கார்டியன்
இந்திய அழுத்தத்துக்கு பணிய மறுக்கும் மகிந்த, அச்சுறுத்தி பணியவைக்க முனையும் இந்தியா?
பிந்திய கட்டுரைகள்
இந்தத் தலைகீழ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?: "ஒப்பற்ற தியாகிகளாகக் கருதப்பட்டவர்கள்; பெரும் போர் வீரர்களாக மதிக்கப்பட்டவர்கள்; வரலாற்றை உருவாக்கக்கூடிய வல்லவர்கள்" என்று புகழப்பட்டவர்கள் எல்லாம் இன்று,தெருவிலே........?
முள்ளிவாய்க்கால்: முடியும் இரண்டாண்டுகள்
வருவார்.... வருவார் என்று கூறிக் கூறியே: தலைவனை மறந்த தமிழினம்.....!
« தனித்துவமான அடையாளங்களைத் தொலைத்துவிட்ட புலிகள் இயக்கம் »
பிரபாகரன் பின்லேடன் மரணங்களின் ஒப்பீடு
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
'ஊடக அறம்': « சமூக நேசம்கொண்ட அனைவரும் இதுபற்றி கவனம் கொள்ள வேண்டுமென எங்கள் பணிவான வேண்டுகோள் »
"புதியதொரு ஆண்டுக்குள்": "உலகம் நுழைந்து கொண்டிருக்கும் நாளில்"............!
புயலில் ஒரு தோணி..
மாவீரர் நாள்: "ஒன்றுபடுமா" புலம்பெயர் தலைமைகள்?
எப்படித்தான் தமிழினம் உய்வது?: விலைபோன இனமாகிப் போன துயரத்தில் ...
பிந்திய அறிக்கைகள்
உணருமா உலகத்தமிழினம்: « அணி பிரிந்து செயற்படுவோமானால் அது தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத் தான் அமையும் »
இன்று லிபியா விவகாரத்தில் காட்டும் அக்கறை ஏன் அன்று தமிழர் விடயத்தில் எழவில்லை? நா.த.அரசு விசனம்,
எதிர்வினை: சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை
நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்?
இரண்டாவது ஆண்டில் காலடி வைத்துள்ள பொங்குதமிழ்: "ஒருமித்த கருதியல் தளத்தில் பயணிக்க" ; "பொங்குதமிழ்" முன்வரும் என்பதில் சந்தேகம் இல்லை.............!
பிந்திய நேர்காணல்கள்
பிரதமர் உருத்ர குமாரன்: எமது பணி எமது மக்களுக்கானது; அவர்களது உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்
மக்களை மதிக்கும் பண்பாடு விரிவடைய வேண்டும்: மக்களை முட்டாள்களாக நடத்தும் "இணையப் புலிகளுக்கு" மக்கள் தான் பதில் கூற வேண்டும்..........?
"துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்" ......?
உரை அரங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ஜரோப்பிய தமிழ் வானொலியின் சங்கப்பலகை
வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
பிந்திய சுவிஸ் செய்திகள்
சிவராம் நினைவுப் பேருரை: போரின் பின்னான இலங்கைத் தீவில் நீதியும் ஜனநாயகமும்
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு: சுவிற்சலாந்து அரசும் ஆதரவு
சிறிலங்காவினது போர்க்குற்றங்கள் மேலும் விசாரிக்கப்படவேண்டும் என்கிறார் நவநீதம்பிள்ளை
சுவிசில் இடம்பெற்ற ஊடகவியலாளர் டி. சிவராம் நினைவுப்பேருரை
சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம்
செய்திகளும் ஆய்வுகளும்
கட்டுரைகள்
அறிக்கைகள்
ஆசிரியதலையங்கம்
சுவிஸ் செய்திகள்
நேர்காணல்கள்
Tamil Heroes Day
புதினப்பலகை
நாடுகடந்த அரசு (Transnational Government)
ஈழ இல்லம் ஆவணக்காப்பகம்
புலிகளின் குரல் நேரலை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணையம் [தமிழில்]
உணருமா உலகத்தமிழினம்:
« அணி பிரிந்து செயற்படுவோமானால் அது தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத் தான் அமையும் »
[ வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011, 07:53.55 பி.ப | இன்போ தமிழ் ]


ஈழத் தமிழர் தேசமானது தனது பலத்தை தமிழக மற்றும் உலகத் தமிழர்கள் எல்லோரது பங்கு பற்றலுடனும் நியாயத்துக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலக மக்கள், சக்திகளின் துணையுடனும் கட்டி எழுப்புவதற்காக நாம் அயராது உழைக்க வேண்டிய கால கட்டம் இது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே இலக்கினைக் கொண்டவர்கள். ஒரே நோக்கத்துக்காகச் செயற்படுபவர்கள். அணுகுமுறை வேறுபாடுகள் நமக்கிடையே இருக்கக்கூடினும் நாம் வென்றடைய வேண்டிய இடம் தொடர்பாக நமக்கிடையே மாறுபாடுகள் எதுவுமில்லை. இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் அணிகள் எதற்கும் தேவையும் இல்லை. இடமும் இல்லை. தமிழீழ தேசத்தின் விடுதலைக்கெனச் செயற்படுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்தார்களேயன்றி அணி பிரிந்து மல்லுக் கட்டுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. இவ்வாறு அணி பிரிந்து செயற்படுவோமானால் அது மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத் தான் அமையும்.

இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியே நின்று அணிபிரிந்து இயங்கும் செயற்பாடுகளைக் கைவிடுமாறு ’ஜனநாயக அணி’ எனத் தம்மை அழைத்துக் கொள்வோரை உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பின்படி உறுதிமொழி எடுத்து உறுப்பினர் தகைமையினை எட்டிக் கொள்ளுமாறும் அவர்களிடம் கோருகிறேன்.

நமக்கிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து நாம் பேசித் தீர்ப்போம் வாருங்கள். முரண்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் ஜனநாயக வரையறைக்குள் இருந்து அணுகுவோம் வாருங்கள். சிங்கள தேசமும் அனைத்துலக சமூகமும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்துள்ளதையும் அவற்றின் செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அச்சத்தைத் தருவதாக உள்ளது என்பதை அவர்களின் செயற்பாடுகள் உணர்த்துகின்றன. தமிழீழ மக்கள் முழுமையாக விடுதலையை அடைவதற்கு வழிகோலும் வலுமையமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நிலைபெற வேண்டியது காலத்தின் கட்டாயம். இதில் ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி. உருத்திரகுமாரன்.




இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது-

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழீழ மக்களின் அரசியல் பெரு விருப்பான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை அரசியல், இராஜதந்திர வழிமுறைகளினால் முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை நாம் முன்னெடுத்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதனை வடிவமைப்பதற்காக மதியுரைஞர்குழுவும், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய அளவில் செயற்பாட்டுக்குழுக்களும் எனது ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டு - 12 நாடுகளில் தேர்தல்கள் நடாத்தப்பட்டு, உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற ஓராண்டு காலகட்டமாகிய 2010 ஆண்டு மே மாதம் 17-19 நாட்களில் அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட பிலடெல்பியா நகரில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டபத்தில் கூட்டப்பட்டதனையும் நீங்கள் அறிவீர்கள்.

முதலாவது அமர்வின் இறுதியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசவை அரசியல் நிர்ணய சபையாக மாற்றியமைக்கப்பட்டது. செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக செயற்குழுக்களும் அமைக்கப்பட்டன.

அரசியலமைப்பின் முன்வரைவினை விவாதித்து ஏற்றுக்கொண்டு – அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தினை அமைத்துக் கொள்வதற்காகக் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இறுதிப்பகுதியில் நியுயோர்க் நகரில் கூடினோம். அரசியலமைப்பினை விவாதித்தோம். ஏற்றுக் கொண்டோம். இவையெல்லாம் வீடியோ பதிவுகளாக நம்மிடம் உள்ளன.

அமர்வின் இறுதி நேரத்தில் சில உறுப்பினர்கள் அதிருப்தி காரணமாகச் சபையில் இருந்து வெளியேறினர். ஜனநாயக முறையின் ஓர் அங்கமாகத் தான் இதனையும் அணுகினோம். இதன் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியில் அமைப்பின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வழிநடாத்திச் செல்லும் நிர்வாகபீடமாக அமைச்சரவையை உருவாக்கினோம். இவ் அமைச்சரவையில் இணைந்து கொள்ள விரும்புவோர் தமது விருப்பத்தையும் தாம் ஆற்றக்கூடிய பணிகளையும் அறியத் தருமாறு சபையில் இருந்து வெளியேறியோர் உட்பட அனைத்து உறுப்பினர்களிடமும் கோரினோம்.

தமது விருப்பத்தைத் தெரிவித்தவர்கள் மத்தியில் இருந்து அமைச்சர்களையும் துணையமைச்சர்களையும் தெரிவுசெய்தோம். இளையோர்கள், மூத்தோர்கள், பெண்கள் என அனைவரைம் உள்ளடக்கிய அமைச்சரவையும் அமைக்கப்பட்டது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தொடங்கினோம்.

தமிழீழ விடுதலை என்ற நமது இலக்கினை முன்னெடுப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள பிரதமர் பணிமனையினையும் 10 அமைச்சுக்களையும் கொண்டமைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தை 10 மாதம் கருவில் இருந்து உருவாகிப் பிறந்து தவழத் தொடங்கி இன்று நடை பயிலவென நிமிரத் தொடங்கும் கால கட்டத்திலேதான் நாம் நிற்கிறோம்.

இக் குழந்தையின் வளர்ச்சியில் படிநிலைகள் உள்ளன. இவ் வளர்ச்சிப் படிநிலைகள் ஒவ்வொன்றையும் நாம் கட்டம் கட்டமாகத் தான் தாண்டிச் செல்ல வேண்டும். அதற்குரிய தொலைநோக்குடன் நாம் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு எண்ணக்கருவாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதனைத் தாங்கள் எல்லோரும் நன்கறிவீர்கள். நேரடித் தேர்தல்கள் மூலம் உறுப்பினர்களைத் தெரிவு செய்து அரசாங்கத்தை அமைத்து அமைச்சுக்களை உருவாக்கியுள்ள நாம் அமைச்சுகளுக்குரிய கட்டமைப்புக்களைத் தற்பொழுதுதான் உருவாக்கத் தொடங்கியுள்ளோம்.

முதற்தடைவையாக அமைக்கப்படும் அரசாங்கம் என்ற வகையில் அரசாங்கத்தின் கட்டமைப்புக்களை உருவாக்கும் பணியும் எம்மிடமே உள்ளது. செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி அவற்றின் ஊடாக செயற்பாடுகளையும் முன்னெடுப்பது என்பது இரட்டிப்பு சவால் நிறைந்த பணியாகும்.

நாம் தற்போது உருவாக்கி வரும் அரசாங்கக் கட்டடைப்புக்கள் எதிர்காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஒரு வலுமையமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக அமைய வேண்டியவை. தற்போதய சூழலில் நாம் ஒருங்குபட்டு கடினமாக உழைப்பதன் ஊடாகவே வலுவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அடித்தளத்தை இட முடியும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இக் குறுகிய கால இயக்கத்தின்போது தனது செயற்பாடுகளை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென்சூடானுடன் நட்புறவுப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

ஏனைய பல முனைகளிலும் இராஜதந்திர உறவுகள் கட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். உரிய நேரம் வரும் போது அவற்றை மக்களுக்கு அறியத் தருவோம்.

சிங்கள தேசமும் அனைத்துலக சமூகமும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்துள்ளதையும் அவற்றின் செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அச்சத்தைத் தருவதாக உள்ளது என்பதை அவர்களின் செயற்பாடுகள் உணர்த்துகின்றன.

ஈழத் தமிழர் தேசமானது தனது பலத்தை தமிழக மற்றும் உலகத் தமிழர்கள் எல்லோரது பங்கு பற்றலுடனும் நியாயத்துக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலக மக்கள், சக்திகளின் துணையுடனும் கட்டி எழுப்புவதற்காக நாம் அயராது உழைக்க வேண்டிய கால கட்டம் இது. இத்தகையதொரு சூழலிலே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசமைப்பினை ஏற்றுக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் தம்மை உறுப்பினர்களாகப் பிரகடனம் செய்யாமல் இன்றுவரை இருந்து வருவது நமக்குக் கவலையையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினை ஏற்று உறுதிமொழி எடுக்கும்போது தான் உறுப்பினர் தகைமையைப் பெறுகின்றனர். இதனால் அனைத்துத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் முறையாக எல்லோரது அங்கீகாரத்துடனும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பின்படி உறுதிமொழியெடுத்து உறுப்பினர்களாகுமாறு நாம் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகிறோம்.
எத்தகைய கருத்து முரண்பாடுகளையும் உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து அணுகுவோம் என்பது தான் இவ் விடயத்தில் எமது நிலைப்பாடாக இருந்து வருகிறது.

இத்தகைய சூழலில் பெப்ரவரி மாதம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு உறுதிமொழி எடுக்காத சிலரதும் தெரிவு செய்யப்படாதவர்கள் சிலரதும் பெயர்களில் சில கோரிக்கைகளும் நிபந்தனைகளும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. இக் கடிதம் என்னை வந்தடைவதற்கு முன்னரே ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. ஓரிரு இணையத்தள ஊடகங்களிலும் பிரசுரமாகியிருந்தது.

இக் கடிதம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்ற ரீதியில் எனக்கு எழுதப்படவில்லை. இக் கடிதத்திற்கு நான் பதிலளிக்காமைக்குப் பல காரணங்கள் உண்டு.

முதலாவதாக இக் கடிதம் ஊடகங்களில் முதலில் வெளிவந்து ஒரு கிழமைக்குப் பின்னர் தான் எனக்குக் கிடைத்தது.

இரண்டாவதாக நாடு கடந்த உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படாத சிலரது பெயர்களும் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன. மூன்றாவதாக இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் எல்லாம் என்னிடம் இல்லை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பில் உள்ளடங்கும் அதிகாரங்கள் மட்டும் எனக்கு உண்டே ஒழிய, நான் சர்வ அதிகாரங்கள் கொண்டவன் அல்ல.

நான்காவதாக இக்கடிதத்தில் காணப்பட்ட மிரட்டல் தொனி.
இக்கடிதம் எனக்குப் பிரதமர் என்ற ரீதியில் எழுதப்படாவிடினும், இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பானது என்ற படியினால் இக்கடிதம் பற்றி நான் அமைச்சரவையின் கருத்தைக் கேட்டேன். மேலே கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையிலும் இக்கடிதம் ஒரு நல்லெண்ணத்துடன் எழுதப்பட்ட கடிதமாக அமையவில்லை என்பதனாலும் நான் அதற்குப் பதில் அனுப்பவேண்டிய அவசியம் இல்லையென அமைச்சரவையும் கருதியது.

இச் சிக்கலை மேலும் நீடிக்க விரும்பாத நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை உறுதிமொழி எடுத்து உறுப்பினர்களாக தகைமைப்படுத்துமாறு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அழைத்தோம். இக் கால அவகாசம் போதாது எனத் தெரிவிக்கப்பட்டமையால் இது இம்மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் அறிவித்தவாறு இம் மாதம் 25 ஆம் திகதிக்குள் உறுதிமொழி எடுக்கத் தவறும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தாங்களாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதாகக் கருதி அடுத்த கட்ட நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலை தோன்றிவிடும்.

இந் நிலை தோற்றம் பெறுவதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற நிலையில் இருந்து நான் விரும்பவில்லை. அவைத்தலைவர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினை ஏற்றுக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எவரும் விரும்பவில்லை.

இவ் வேளையில், உறுதிமொழி எடுக்காதவர்களை உறுதிமொழியை எடுத்து அவையின் உள்ளே வந்து எமது ஒற்றுமையைப் பலப்படுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளம் தலைமுறை உறுப்பினர்கள் எடுத்திருக்கும் முயற்சியையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். இம் முயற்சிக்குப் பாராட்டும், இம் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே இலக்கினைக் கொண்டவர்கள். ஒரே நோக்கத்துக்காகச் செயற்படுபவர்கள். அணுகுமுறை வேறுபாடுகள் நமக்கிடையே இருக்கக்கூடினும் நாம் வென்றடைய வேண்டிய இடம் தொடர்பாக நமக்கிடையே மாறுபாடுகள் எதுவுமில்லை.

இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் அணிகள் எதற்கும் தேவையும் இல்லை. இடமும் இல்லை. தமிழீழ தேசத்தின் விடுதலைக்கெனச் செயற்படுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்தார்களேயன்றி அணி பிரிந்து மல்லுக் கட்டுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை.

இவ்வாறு அணி பிரிந்து செயற்படுவோமானால் அது மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத் தான் அமையும்.

இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியே நின்று அணிபிரிந்து இயங்கும் செயற்பாடுகளைக் கைவிடுமாறு ’ஜனநாயக அணி’ எனத் தம்மை அழைத்துக் கொள்வோரை உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பின்படி உறுதிமொழி எடுத்து உறுப்பினர் தகைமையினை எட்டிக் கொள்ளுமாறும் அவர்களிடம் கோருகிறேன்.

நமக்கிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து நாம் பேசித் தீர்ப்போம் வாருங்கள். முரண்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் ஜனநாயக வரையறைக்குள் இருந்து அணுகுவோம் வாருங்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இதுவரை தெரிவு செய்யப்படாத உறுப்பினர்களைத் தெரிவு செய்யவும், நியமனம் செய்யப்படும் பேராளர்களை நியமனம் செய்யவும் செனட் சபையை நிர்ணயம் செய்வதற்குமான ஏற்பாடுகளை நாம் இப்போது முன்னெடுத்து வருகிறோம்.

பிரான்சிலும் பிரித்தானியாவிலும் நெதர்லாந்திலும் பின்லாந்திலும் இருந்து இன்னும் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள 10 பிரதிநிதிகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாம் தேர்தல் ஆணையத்தைக் கோரியுள்ளோம்.

இத் தெரிவுகள் நடைபெற்ற பின்னர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு உட்பட உறுப்பினர்கள் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்களை அரசியலமைப்புக்குட்பட்டு மேற்கொள்ள முடியும். பேச்சுக்களின் மூலம் மாறுபட்ட கருத்துக்களுக்குள் உடன்பாடு காணவும் முடியும்.

நாம் அரசாங்கத்தினை அமைத்த பின்னர் அரசாங்க நடைமுறைகளில் இருந்து பின்வாங்குவதோ, விலகிச் செயற்படுவதோ அல்லது தடம் பிறள்வதோ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளர்ச்சிக்கோ அல்லது சிறப்புக்கோ உதவாது. இந்த விடயத்தில் நாம் தெளிவாகத் தான் இருக்கின்றோம்.

நாம் இப்போது உருவாக்கும் அரசாங்கத்தை அதன் கட்டமைப்புக்களை மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே எதிர்காலத்திலும் நடாத்திச் செல்லப் போகின்றனர். இங்கு நான் உட்பட தனி மனிதர்கள் எவரும் அரசாங்கத்தின் நிலையான தலைவர்களாக இருக்கப் போவதில்லை.

ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்கள் தமது முழுமையான விடுதலையை அடைந்து கொள்வதற்கு வழிகோலும் வலுமையமாக நிலைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக எம்முன்னே விரிந்து நிற்கின்றது.

அதனைக் கவனத்தில் கொண்டு அவ்வுண்மையை ஏற்றுக் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை உரிமையுடன் கோரி நிற்கின்றேன்.

தமிழ் உறவுகளே!

நாம் அதிவேகமாகச் செயற்பட வேண்டிய காலம் இது. தமிழ் ஈழத் தேசத்தவராகிய நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கோர வேண்டிய காலகட்டம். நமது மக்களுக்கு அநீதியினை இழைத்தவர்களை நீதியின்முன் நிறுத்துவதற்கு நாம் அணிவகுக்கும் காலகட்டம். நமது மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் வேண்டி நாம் போர்க்கொடி தூக்கும் காலகட்டம்.

தமது குருதியால் நமது தாயகப்பூமியினை நனைத்து, தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து, இக் கனவுகளுடன் தம்விழி மூடிய நமது மாவீரர்களின் எண்ணங்களுக்கு நாம் வடிவம் கொடுக்கும் கால கட்டம். தாயக பூமியில் சிங்கள இனவாதப் பூதத்தால் பிய்த்தெறியப்பட்ட நமது மக்களின் மற்றும் மாவீரர், போராளிகள் குடும்பங்களின் வாழ்க்கையினை நிமிரச் செய்வதற்கு நாம் உறுதுணையாக நிற்க வேண்டிய காலகட்டம்.

நமது தேசத்தின், மக்களின் நலன் சார்ந்து, நமது மக்களுக்கு விசுவாசமாக நாம் செயற்பட வேண்டிய காலகட்டம். இக் காலகட்டத்தில் மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அனைத்தும் அமையட்டும்.

உறுதிமொழி எடுக்காதிருக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் இவ் அழைப்பினைத் தனிப்பட்ட அழைப்பாகக் கருதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற ரீதியில் இரு கரம் விரித்து உங்களை அழைக்கின்றேன். வாருங்கள். ஒன்றாகப் பயணிப்போம். சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைப்போம்.
நடிகனின் மறுபக்கம்!:
ரஜினியை சுற்றி கட்டி எழுப்பப்பட்டிருக்கும் பிரமாண்ட பிம்பம் எந்த அளவுக்கு உண்மையானது?
[ புதன்கிழமை, 08 யூன் 2011, 06:41.11 மு.ப | ஊடகப் பணிமனை ]


ரஜினியை சுற்றி கட்டி எழுப்பப்பட்டிருக்கும் பிரமாண்ட பிம்பம் எந்த அளவுக்கு உண்மையானது?

ரஜினி மருத்துவமனையில் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ரஜினியைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் விதவிதமாக வெளியானபடியே இருக்கின்றன. 'இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டன' கல்லீரல் செயல் இழந்துவிட்டது, உயிருக்கு ஆபத்து' என பலவாறு சொல்லப்படும் நிலையில் ரஜினியின் உடல்நிலை ஏதோ ஒரு விதத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. ரஜினியின் உடல்நிலை எப்போது சீராகும், அவர் மீண்டு வந்து நடிப்பாரா, முடியுமா என்பதுபோன்ற பல கேள்விகள் அலசப்படுகின்றன. வேறு சிலரோ, ரஜினியுடனான தங்களது உறவு குறித்து அசைபோடத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் ரஜினி என்ற மனிதரை நாம் சற்று விலகி நின்று பார்ப்போம்.
இதைத்தாண்டி ரஜினிக்கு ஒரு பிரமாண்ட சித்திரம் உருவானதில்......................?

அவரது 'எளிமை' ஒரு பாத்திரம் வகிக்கிறது. வாராத தலை, கலைந்த ஆடை, தாடி நிறைந்த முகம்... என்பது அவரது புறத்தோற்றம்.

இதை வைத்து சாதாரண எளிய ரசிகர்களும் கூட, 'எவ்வளவுப் பெரிய ஆளு. எவ்வளவு எளிமையா இருக்காரு' என்றே எண்ணுகின்றனர்.

உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்களின் பெயர் வந்துவிட்டதைக் கண்டு டீ கடையில் அமர்ந்து மகிழ்ச்சியடைவதற்கும், ரஜினி எளிமையாய் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யம் அடைவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

ஓர் இந்தியன் உலக கோடீஸ்வரனாய் ஆனதால் டீ கடை தமிழனுக்கு என்ன லாபம்?

ரஜினி எளிமையாய் இருப்பதால் சலூன் கடை தமிழனுக்கு என்ன பயன்?

புறத்தோற்றத்தில் எளிமையைப் பின்பற்றும் ரஜினி தனது ஒவ்வொரு படத்துக்கும் பல கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்திக்கொண்டேப் போகிறார்.

'ராணா'வில் ரஜினிக்கான சம்பளம் 35 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே, ரஜினி, ரஜினி என வெறியூட்டப்பட்ட ரசிக வெறியோடு அலறத் தேவையில்லை.

ஏனெனில் உங்கள் ரசனை இயல்பானதில்லை. அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

ரஜினியை சுற்றி கட்டி எழுப்பப்பட்டிருக்கும் பிரமாண்ட பிம்பம் எந்த அளவுக்கு உண்மையானது?

ரஜினிக்கு ஒன்று என்றால் மொத்த தமிழ்நாடும் ஸ்தம்பித்துவிடும் என்பது போலவும், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பைத்தியமாகிவிடுவார்கள் என்பதைப் போலவும் உருவாக்கப்பட்டிருக்கும் தோற்றம் பல பத்தாண்டுகளாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கிய மிகை பிம்பம். யதார்த்தத்தில் நிலைமை அவ்வாறு இல்லை.

சினிமா மட்டுமே மிகப்பெரிய பொழுதுபோக்கு மையமாக இருந்த காலத்தில் ரஜினிக்கு மிகப்பெரிய மவுசு இருந்ததுதான். கடந்த 15 ஆண்டுகளாக தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் ஆதிக்கம் வந்துவிட்ட பிறகு ரசிகர்களுக்கான ரசனைத் தேர்வுகள் அதிகரித்துவிட்டன. இதில் ரஜினி மட்டுமே போட்டியாளர் இல்லை. இதனால் நடைமுறையில் ரஜினிக்கு ரசிகர்களிடையே இருந்த செல்வாக்கு படிப்படியாக குறைந்துவிட்டது. ஆனால் அப்போதெல்லாம் ரஜினி, அவருடையக் கட்டுப்பாட்டில் இருந்து வெகுதூரம் இழுத்துச் செல்லப்பட்டிருந்தார். இந்த பிரமாண்ட சினிமா சந்தைக்கு ரஜினி என்ற பெரிய இரை தேவைப்பட்டுக்கொண்டே இருந்தது. உண்மையில் ரஜினியே நினைத்தாலும் அவரது செல்வாக்கை குறைக்க முடியாது. ஏனெனில் அவரது செல்வாக்கை கட்டுப்படுத்தும் அதிகாரம் ரஜினியிடம் இல்லை.

பொதுவாகவே உலகமயமாக்கல் சூழலில் எதையும் வேகமாக உறிஞ்சி முழு பலனையும் அனுபவித்துவிட்டு சக்கையாக்கிவிடுவது அதன் இயல்பு. பிளாச்சிமடா தொடங்கி மைக்கேல் ஜாக்சன் வரை பல உதாரணங்கள் வழியே இதை நாம் அறிய முடியும். போட்டி முதலாளித்துவ உலகில் நாள்தோறும் புதிய ஸ்டார்கள் கொண்டுவரப்படுகிறார்கள். அவர்களுக்கான சந்தை மதிப்பு காலாவதியாகும் வரை அவர்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். பிறகு புதிய இன்னொரு ஸ்டார் வருவார். ரஜினியை பொறுத்தவரை அவர் நீடித்து உழைக்கும் ஒரு தரமான பொருள். மற்றொரு புதிய நடிகரை புதிதாக பில்டப் செய்து மேலேற்றுவதைக் காட்டிலும் ரஜினியைக் காட்டி வித்தைக் காட்டுவது கூடுதல் லாபம் தரக்கூடியது. அதைத்தான் பலகாலமாக ஊடக மற்றும் அரசியல் அரங்கில் செய்து வருகிறார்கள்.

கடந்த இருபது ஆண்டுகளாக, ஒவ்வொரு ரஜினி படம் ரிலீஸ் ஆகும் தினத்தன்றும் தமிழகத்தில் திருவிழா நடப்பதை போல மாற்றியிருக்கின்றனர். உண்மையில் இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அதற்கு முன்பிருந்தே தொடங்கி விடுகின்றன. ரஜினி படம் அறிவிப்பு வந்த உடனேயே அந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என ஒவ்வொரு பத்திரிகையும் தங்களது கற்பனை சக்தியின் எல்லை வரை ஒரு கதை தீட்டுகின்றன. பிறகு அதில் ரஜினியின் கெட்-அப் என்ன, ஹீரோயின் யார், இசை அமைப்பது யார், இயக்குநர் யார் என ஒவ்வொன்றையும் உளவறிந்து சொல்லி, தங்களது விற்பனையைப் பெருக்குகின்றன. படப்பிடிப்பில் ரஜினி இன்று மூன்று முறை தும்மினார், நான்குமுறை கழிப்பறை போனார் என்பது வரை கூச்சமின்றி எழுதுகின்றனர். ரஜினி ஒரு நடிகன். ஆனால் அவரை கடவுளின் அவதாரம் போல சித்தரித்து, ரசிகர்களை பக்தர்களாக்கிய முழு பொறுப்பும் தமிழக ஊடகங்களுக்குதான் உண்டு. இப்படி ரசிகர்களை, பக்தர்களாக்கும் இவர்கள், அவ்வப்போது 'ரஜினிக்கு ஒரு கடிதம்' என்ற பெயரில் 'தலைவா, விஜயகாந்த் வந்துட்டாரு. நீ இன்னும் வரலையே' என உசுப்பேற்றவும் செய்வார்கள்.

ரஜினி ரசிகர்களின் பிற்போக்குத் தனங்களை எள்ளி நகையாடி, விமர்சித்து அவர்களை மாற்ற வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஆனால் அவர்களோ, எரியும் நெருப்பை அணைக்காமல் எவ்வளவு தூரம் தூண்டிவிட முடியுமோ அவ்வளவு தூரம் தூண்டி விடுகின்றனர். பாபா' பட அறிவிப்பு வெளியான உடனேயே அதில் ரஜினியின் பஞ்ச் டயலாக் என்னவாக இருக்கலாம் என வாசகர்களுக்குப் போட்டி நடத்தியது ஒரு பத்திரிகை. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களது பஞ்ச் டயலாக்குகளை எழுதி அனுப்பி, அதில் 'சிறந்தவற்றை' தேர்ந்தெடுத்து பரிசு வழங்கினார்கள். இப்படி ரசிகர்களின் முட்டாள்தனங்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி பயன்படுத்திக்கொள்ளும் இவர்களுக்கு 'ரஜினி, தமிழர்களை ஏமாற்றுகிறார், நாடகமாடுகிறார், கர்நாடகாவில் சொத்து வாங்கிவிட்டார்' என்றெல்லாம் 'ஆவேச' கூச்சலிட ஏதேனும் அருகதை இருக்கிறதா?

இப்படி ரஜினியின் திரை நடிப்பு, யதார்த்த நடிப்பு என இரண்டையும் வெவ்வேறு முகங்களுடன் எழுதி விற்பனை செய்த ஊடகங்கள், தற்போது மருத்துவமனையில் இருக்கும் ரஜினியை வைத்து தங்களின் அடுத்தக்கட்ட வர்த்தகத்தை நடத்துகின்றன. ஆனால் பல ஆண்டுகளாக ஓர் உழைக்கும் மிருகமாக மாற்றப்பட்டிருக்கிறார் ரஜினி. கடைசியாக ரஜினியை வைத்து 'எந்திரன்' என்ற சினிமா எடுத்து இதுவரை இல்லாத வகையில் 150 கோடி ரூபாய் கல்லா கட்டியது சன் டி.வி. இந்த நுகர்வு வெறி தின்று துப்பிய சக்கையாகவும் ரஜினியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

மற்ற நடிகர்களின் ரசிகர்களைக் காட்டிலும் ரஜினி ரசிகர்கள் கூடுதலான ஈடுபாடு கொண்டவர்கள் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது என்பது போன்றவற்றை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வர முடியாது. ரஜினி ரசிகர் மன்றத்தின் செல்வாக்கு உண்மையில் அவ்வளவு பெரிதானது இல்லை. அதில் இருப்பவர்களின் பெரும் சதவிகிதத்தினர், 'ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார், நாமும் ஏதேனும் ஒரு பதவிக்கு வந்துவிடலாம்' என நம்புகிற காரியவாத ரசிகர்கள்தான். ஆனால் அரசியலுக்கு வருவதாக சொல்வதெல்லாம் வெறும் நாடக டயலாக் என்பது புரிந்த பின்னர் அவர்கள் படிப்படியாக வெளியேறத் தொடங்கிவிட்டனர். விஜயகாந்த், கட்சி தொடங்கியபோது இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் சொன்னார்கள். 'நேத்து வந்து மன்றம் ஆரம்பிச்சவன்லாம் இன்னைக்கு மாவட்டச் செயலாளர்னு அலையுறான். நாங்க இத்தனை வருஷம் உங்களையே நம்பியிருக்கோம். ஒரு நல்லவழியை காட்ட மாட்டேங்குறியே தலைவா' என பேட்டி எல்லாம் கொடுத்தார்கள். இப்போது ரஜினியின் ரசிகர் மன்ற கூடாரத்தில் மிச்சம் இருப்பவர்கள் சந்தையில் விலைபோகாதவர்களும், 'பிழைக்கத் தெரியாத' பக்தர்களுமே!

ஆனாலும் ரஜினியின் செல்வாக்கு இம்மியும் குறையவில்லை என்பதுபோல் ஒரு சித்திரம் இருக்கிறதே... அது எப்படி?

'ஊடகங்கள் ஊதிப் பெருக்குவது' ஒரு பக்கம் இருக்கட்டும். படம் ஓடுகிறதே... அதில் ஒன்றும் பாதகம் இல்லையே... ஏனெனில் புதிது, புதிதான ரஜினி ரசிகர்கள் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றனர். விஜய், சிம்பு என பலருக்கு அடுத்த ரஜினியாகும் கனவு இருக்கிறது. அந்தக் கனவு இல்லாத நடிகர்களும் கூட, ரஜினியின் 'மார்க்கெட்டையும், அவரது பக்தர்களான வாடிக்கையாளர்களையும்' தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். அதனால் இன்று ரஜினி ரசிகர்களாக இருப்பவர்கள், ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல. போட்டியில் இருக்கும் இதர நடிகர்களின் ரசிகர்களும் ரஜினி ரசிகர்கள்தான். அப்புறம் தேர்தல் சமயத்தில் வடிவேலு பேசினாலும், ஜெயலலிதா பேசினாலும், விஜயகாந்த் பேசினாலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடுவதைப் பார்த்தோம். அதை வைத்து அவர்களுக்குத் தனிப்பட்ட வகையில் எக்கச்சக்கமான செல்வாக்கு இருப்பதாக கணக்கிடுவது எப்படித் தவறானதோ, அதுபோலதான் ரஜினிக்கு சேரும் கூட்டத்தையும் மதிப்பிடுவது தவறானது.

ரஜினிக்காக நாம் பாவப்பட வேண்டுமா என்றால் ஒரு மனிதன் என்ற அடிப்படையிலும், ஒரு கலைஞன் என்ற அடிப்படையிலும் ரஜினிக்காக நாம் பரிதாபப்படலாம். ஆனால், நடைமுறையில் அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளோடு பலகோடி மக்கள் வாழ்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் கூலி வேலை செய்தும், பல்வேறு நிறுவனங்களில் உடல் மற்றும் மூளை உழைப்பைக் கொடுத்தும் பணிபுரியும் சாதாரண மக்களின் உழைப்பில்தான் ரஜினி என்ற பிரமாண்ட பிம்பம் உயிர் வாழ்கிறது. இன்றும் மூன்று வேளை நிம்மதியான உணவுக்கு வழியற்ற கோடிக்கணக்கானோர் நம்மிடையே வாழ்கின்றனர். காய்ச்சலுக்கு மருந்து வாங்க வசதியற்றவர்களும், நோய்களை தீர்த்துக்கொள்ளும் திராணியற்றவர்களும் நம்மைச் சுற்றி நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்காக யார் கவலைப்படுவது?

ரஜினி இசபெல்லா மருத்துவமனையில் இருந்தார், பிறகு ராமச்சந்திராவில் இருந்தார், இப்போது சிங்கப்பூரில் இருக்கிறார், அவர் விரும்பினால் சிகிச்சைக்காக உலகின் எந்த நாட்டுக்கும் போகலாம். ஆனால் மக்களின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபமாக இருக்கிறது. நாம் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது, ரஜினிக்கா? மக்களுக்கா?

இப்படிப் பேசுவதை 'வறட்டுவாதம்' என வரையறுப்பதோ, 'நெகிழ்ச்சித்தன்மையற்றதாக' புரிந்துகொள்வதோ சுலபமானது. ஆனால் அழகியல் என்பது அரசியல் நீக்கம் செய்யப்பட்டதல்ல. இப்படி எல்லாம் தோண்டித் துருவி பார்க்காமல் ரஜினியைப் பார்த்தோமா, விசில் அடித்து ரசித்தோமா என கடந்து சென்றால் பிரச்னை இல்லை. ஆனால் அந்த 'வெகுமக்கள் மனநிலை' உண்மையானது இல்லை என்பதே இங்கு சொல்ல வருவதன் சாரம். இது பொய்களால் கட்டப்பட்டது. அதனால்தான் ரஜினியே நடித்திருந்தும் கூட 'பாபா', 'குசேலன்' போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தன. இன்னொரு பிரிவினர், 'உழைக்கும் தொழிலாளிகளை தனது நடிப்பின் மூலம் ஆசுவாசப்படுத்தினார்' என ரஜினியைப் பற்றி சொல்கின்றனர். 'உழைப்பாளிகள் ரிலாக்ஸ் ஆக ரஜினி படங்கள் உதவின' என்பது அவர்களின் ஆய்வு முடிவு. இந்த தர்க்கத்தின்படி 'மயக்க மருந்துகள் நோயைத் தீர்க்கும்' என்ற முடிவுக்கே நாம் வர முடியும்.

இதைத்தாண்டி ரஜினிக்கு ஒரு பிரமாண்ட சித்திரம் உருவானதில்......................?

அவரது 'எளிமை' ஒரு பாத்திரம் வகிக்கிறது. வாராத தலை, கலைந்த ஆடை, தாடி நிறைந்த முகம்... என்பது அவரது புறத்தோற்றம்.

இதை வைத்து சாதாரண எளிய ரசிகர்களும் கூட, 'எவ்வளவுப் பெரிய ஆளு. எவ்வளவு எளிமையா இருக்காரு' என்றே எண்ணுகின்றனர்.

உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்களின் பெயர் வந்துவிட்டதைக் கண்டு டீ கடையில் அமர்ந்து மகிழ்ச்சியடைவதற்கும், ரஜினி எளிமையாய் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யம் அடைவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

ஓர் இந்தியன் உலக கோடீஸ்வரனாய் ஆனதால் டீ கடை தமிழனுக்கு என்ன லாபம்?

ரஜினி எளிமையாய் இருப்பதால் சலூன் கடை தமிழனுக்கு என்ன பயன்?

புறத்தோற்றத்தில் எளிமையைப் பின்பற்றும் ரஜினி தனது ஒவ்வொரு படத்துக்கும் பல கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்திக்கொண்டேப் போகிறார்.

'ராணா'வில் ரஜினிக்கான சம்பளம் 35 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே, ரஜினி, ரஜினி என வெறியூட்டப்பட்ட ரசிக வெறியோடு அலறத் தேவையில்லை.

ஏனெனில் உங்கள் ரசனை இயல்பானதில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக